பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

165




போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்
எழுந்தருள்க என்றாள் எடுத்து 96

வன்மொழியும் மென்மொழியும்

வானவர்கோன் ஏவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிரா யுதற்றொழுதான்
கண்டார் உவப்பக் கலந்து 97


விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணணங்கின்
வன்மொழியும் தேவர் மனமகிழத் தான்மொழிந்த
மென்மொழியும் சென்றுரைத்தான் மீண்டு 98


அங்கி அமுதம்நீர் அம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்
பெற்றாய் எனவருணன் ஆகண்டலன் தருமன்
மற்றோனும் ஈந்தார் வரம் 99


அங்கவர்கள் வேண்டும் வரங்கொடுக்கப் பெற்றவர்கள்
தங்களொடும் தார்வேந்தன் சார்ந்தனன் மேல் - மங்கை
வயமருவு கின்ற மனக்கா வலர்க்குச்
சயமரந்தான் கண்டதோர் சார்பு 100

தமயந்தி துயரநிலை

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்த பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து 101