பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

புகழேந்தி நளன் கதை




துயிலாதோ என்னும் சுடர்மதியம் கான்ற
வெயிலால் உடலுருகா வீழ்ந்து 115


ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவாய் அடங்காத் துயர்? 116


ஈரமதியே இளநிலவே இங்ஙனமே
சோர்குழலில் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி எனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று 117


தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று 118


மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தித்
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம் 119


அள்ளிக் கொளலாய் அடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா 120


ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க
இடையாமம் காவலர்கள் போந்தார் இருளில்
புடைவாய் இருள்புடைத்தாற் போன்று 121