பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

175




கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது 162


மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோல் செம்மாந்து - மெல்லியலாள்
பொன்மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன் 163


வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் - வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறில் ஆக்கும்
இருங்கலியைக் கண்டார் எதிர் 164


ஈங்குவர வென்னென் றிமையவர்தம் கோன்வினவத்
தீங்கு தருகலியும் செப்பினான் - நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான் 165


மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய
உள்ளக் கருத்தை ஒழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்தது 166


விண்ணரசர் நிற்க வெறித்தேன் மனமாலை
மண்ணரசர்க் கீந்த மடமாதின் - எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்வற்கும் கீழ்மை
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து 167


வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு 168