பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

புகழேந்தி நளன் கதை



தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி இரண்டு.208

கலிமகன் புகுதல்

ஆண்டிரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியும் காண்கிலான்-நீண்ட புகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு 209


சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி-சிந்தையெல்லாம்
தன்வயமே ஆக்குந் தமையனுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து 210


நாராய னாயநமவென்றவனடியிற்
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்-பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தைக் கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி 211


நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன்-மன்னவனே!
போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றான் எடுத்து  212


புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி இளமேதிக் காற்குழம்பு-பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு  213


வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறக்
கங்கைத் திரைநீர் கரையேறிச்-செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து  214