பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

191



சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்
போந்தருளு கென்றாள் புலந்து 266


அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவாள் மேற்கடற்கே - எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளாற் பாரை
யொளிப்பான்போற் பொற்றே ருடன் 267


பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்கும் தோன்றா விருள் 268


பாழ்மண்டபம் அடைதல்


எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள் வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்
பாழ்மண்டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண்டபங்கண்டான் வந்து 269


மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாறு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்
மாதாரய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்
போதரா யென்றான் புலர்ந்து 270


வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து 271


பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை
வழியரீைரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனியென்றான் அரசு 272