பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

புகழேந்தி நளன் கதை


கண்டானை யுற்றாள் கமலமயி லேயென்றான்
உண்டாய தெல்லாம் உணர்ந்து 312

எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னுர் யாதுன்பேர்
நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்
கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்
விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து 313

முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்
காணா தழுகின்றேன் என்றாள் கதிரிமைக்கும்
பூணாரம் பூண்டாள் புலர்ந்து 314

சேதி நகர் சேர்தல்


சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டுஅப்
போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி
கிடத்துவான் மன்னவர்தம் கீர்த்தியினைப் பார்மேல்
நடத்துவான் வட்டை நடந்து 315

அற்ற துகிலும் அறாதொழுகு கண்ணிரும்
உற்ற துயரும் உடையவளாய் - மற்றொருத்தி
நின்றாளைக் கண்டோம் நிலவேந்தன்
பொற்றேவி என்றார் மடவார் எடுத்து 316

போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை யறியவே - நீயேகிக்
கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கணிதிறந்து
வண்டுவாழ் கூந்தன் மயில் 317

ஆங்கவளும் ஏக அரசன் பெருந்தேவி
பூங்கழலின் மீதே புரண்டழுதாள் - தாங்கும்
இனவளையாய் உற்ற துயர்எல்லாம்
எனது வினைவலிகாண் என்றாள் மெலிந்து 318