பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

புகழேந்தி நளன் கதை


மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்த
காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்
வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்
காணியாய் நின்றா ளயர்ந்து 326

தன்மகளாவ தறியாத் தடுமாறாப்
பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்
கோதிப்போய் மேதி குருகெழுப்பும் தண்பணைசூழ்
சேதிக்கோன் தேவி திகைத்து 327

கந்தனையும் கன்னியையும் கண்டாயி னுஞ்சிறிது
தன்துயரம் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு 328

விதர்ப்பம் சேர்தல்


கோயிலும் அந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்
கானாள மக்களையும் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது 329

அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார்
தொழுவார் தமரெங்கும் சூழ்வார் - வழுவாக்
காமநீ ரோதக் கடல் கிளர்ந்தால் ஒத்தவே
நாமவேல் வீமன் நகர் 330

தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்
சிந்தை கலங்கி திகைத்தலமந் - தெந்தாயான்
பட்டதே என்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்
விட்டநீர் மேலே விழ 331

செவ்வண்ண வாயாளும் தேர்வேந் தனுமகளை
அவ்வண்ணங் கண்டக்காலா ற்றுவரோ - மெய்வண்ணம்