பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

புகழேந்தி நளன் கதை


கொம்பர் இளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னுறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று 352

புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தான் அறவுயிர்த்து
நெஞ்சினால் எல்லாம் நினைந்து 353

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை? 354

பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
காணலே வேலைக் கழிகுருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணராம் வீங்கிருள்வாய் ஆங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீர் எனக்கு 355

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்பபோல் ஆர்கடலே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று 356

முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீர் அயோத்தி நகரடைந்தான் - பொன்னி
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு 357

அயோத்தி அடைதல்


மான்தேர்த் தொழிற்கும் மடைத்தொழிற்கும் மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலான் உயர்நறவத் - தேன்தோய்க்கும்