பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

புகழேந்தி நளன் கதை


கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர் 365365

ஒண்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தான்என் றையுறேல் நீ 366

எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணி
அலைப்பட்ட கொங்கையாளாங்கு 367

வாக்கினால் மன்னவனை ஒப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான்
ஏந்துநூல் மார்பன் எடுத்து 368

மற்றும் ஓர் சுயம்வரம்


மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தண நீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்துரம் தேர்க்கோலம் கொள்வான்
படைவேந்தன் என்றாள் பரிந்து 369

எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றான் அந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து 370

அயோத்தி மன்னன் புறப்படல்


வேத மொழிவாணன் மீண்டும் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்