பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

புகழேந்தி நளன் கதை


மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா 378

இத்தாழ் பணையில் இருந்தான்றிக் காயெண்ணிற்
பத்தாயிரங்கோடி பாரென்ன - உய்த்தனில்
தேர்நிறுத்தி எண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான் 379

ஏரடிப்பார் கோலெடுப்ப இன்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலுக்கு இத்தொழிலும் மாற்றுதியோ என்றுரைத்தான்
தேர்த்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து 380

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந்திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி 381

ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட்டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையான் ஆங்கு 382

வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயின்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து 383

வீமன் வரவேற்றல்


கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்