பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

211


சேடி செய்தி உரைத்தல்


கொற்றக் குமரனையும் கோதையையும் தான்கண்டு
மற்றவன்றான் ஆங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது 397

கொங்கை யளைந்து சூழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கையிரண்டும் அடுபுகையால் இங்ஙன்
கருகியவோ என்றழுதிகள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து 398

தந்தைக்கு அறிவுறுத்தல்


மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்குக்
கொற்றத் தனித்தேரும் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலான் என்றாள் குறித்து 399

வீமன் சென்று அழைத்தல்


போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்க்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஒதம்
வரிவளைகொண்டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து 400

செவ்வாய் மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினான் நோக்கித் தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து 401

பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்கும் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் உரு 402