பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

புகழேந்தி நளன் கதை



தோன்றிய கொப்புளங்கள்; இவற்றை நீங்கள் நட்சத்திரங்கள் என்று தவறாகக் கூறுகின்றீர்கள்’ என்று உள்ளம் வெந்து உரையாடினாள்.

“என் உயிர் கொள்ளை போகின்றது” என்று கூறினாள். “இந்த முற்றிய நிலா பாம்பின் கூரிய பல்போல் வாட்டுகிறது; நஞ்சு கக்குகிறது; என்னை வருத்துகிறது” என்று பேசினாள். “இந்த இரவுப் பொழுதுக்கு உள்ளம் மிகவும் கொடிது” என்று கூறினாள்.

“ஏன் இந்த இரவுப் பொழுது எரியாக எரிகிறது” என்று கேட்டாள். ‘வெங்கதிரோனை விழுங்கி விட்டதாலா தன் கொங்கைகளில் எழுந்த நெருப்பின் வெப்பத்தாலா திங்கள் வெளிப்படுத்தும் வெம்மைமிக்க கதிர்களாலா” என்று கேட்டாள்.

யுகங்கள் பல சேர்ந்து தொகைப்பட்டு ஒர் இரவு என்னும் உரு எடுத்துக் கொண்டதோ?” என்று வருந்தினாள். ஒர் இரவு அவளுக்குப் பல யுகங்களாகத் தோற்றம் அளித்தது.

“ஏன் கோழி இன்னும் கூவவில்லை? அதன் குரல் அடைத்துக் கொண்டதோ?” என்று கேட்கத் தொடங்கினாள்.

“இந்தக் கடலுக்கு ஒய்வு ஒழிச்சல் என்பதே கிடையாதோ?” எப்பொழுதும் இரைச்சல் இட்டுக் கொண்டு இருக்கிறதே! இது தூங்கவே தூங்காதா” என்று கூறினாள்.

சுடர் மதியம் வெளிப்படுத்திய வெயில் அவளைச் சுட்டு எரித்தது.

மோகம் என்ற சுழியில் அகப்பட்டுச் சுழன்றாள். அவள் மெல்லியலாள் இந்த வல்லியலை அவளால் தாங்க முடியாமல் போயிற்று. ஆடி வரி வண்டு அருகில் பறந்து