பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

47



“அவள் மாலையிட்டு விட்டாள்; எனக்கு அல்ல; அவள் தேர்ந்து எடுத்த காதலனுக்கு; நளன் வந்தான்; அவளைத் தட்டிச் சென்றான்” என்று கூறி விளக்கினான்.

கலியனால் இச்செய்தியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ‘இனப் போராட்டம்’ அது அவனையும் பற்றியது. ‘தேவர் இனம் மதிக்கப்படவில்லை’ என்று ஒரு புதிய போராட்டத்தை இந்த மண்ணுலக மாந்தர் போல் அவனும் துவக்கி வைத்தான்.

“இது தனி ஒரு தேவனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல; நம் திருக்கூட்டத்துக்கே நேர்ந்த அவமதிப்பு” என்று தெரு கூட்டிப் பேசினான்.

“இதை எதிர்த்தே தீருவேன்” என்றான்.

குறளகத்தின் முன்பு உண்ணாவிரதம் இருப்பான் என்று இந்திரன் எதிர்பார்த்தான்.

திருக்குறளில் அவன் நம்பிக்கை வைக்கவில்லை. அழிப்பதே தன் தொழில் என்று கொண்டவன் ஒரு சில அரசியல் சூழ்ச்சிக்காரர்களைப் போல்.

“அவர்கள் காதலை முறிப்பேன்; வாழ்க்கையைப் பறிப்பேன்; கூட்டு வாழ்க்கையை உடைப்பேன்” என்று சபதம் செய்தான். “அது தன்னால் முடியும்” என்று குரல் கொடுத்துப் பேசினான்.

இந்திரன் தடுத்தான்; “உன் செபம் அங்குப் பலிக்காது; மக்கள் அவர்களை மதிக்கிறார்கள். அசைக்க முடியாது” என்று சொல்லிப் பார்த்தான்.

“அவன் நெறி தவறாதவன்; வாய்மை அவன் வழுவாதவன். நல்லவர்களுக்கு என்றும் கேடு வராது; அதைவிட அவன் பத்தினி அவள் பதிவிரதை, மழை பெய்யச்