பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

குமுதம், கல்கி, ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள், அதனதன் கருத்துக்களை எழுதி வருகின்றன. ஆனால், அரசியல்வாதிகள் ஒரு சிலரின் தன்னாதிக்கக் கோட்பாடுகளை, ஊழல் விவரங்களை சில ஏடுகள் எதிர்த்தும், மறுத்தும் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் 'நக்கீரன் வார ஏடும் ஒன்று.

பத்திரிகைகளில் மறுப்புக் கட்டுரைகள் எழுதப் பயிற்சி பெறுவோர்க்கு, அரசியல் அனுபவங்கள், இலக்கியம், வரலாறு, ஆன்மிக நுண்ணறிவுகள், செஞ்சொற்கள் செறிந்த இலக்கியத் தமிழ்நடை ஆராய்ச்சி உணர்வுகள் ஆகிய திறமைகள் தேவை.

அத்தகைய அறிவாளர்களது, மறுப்புக் கட்டுரைகளை மக்கள் விரும்பிப் படிப்பார்கள். அதனால், அந்த மறுப்புப் பத்திரிகைகளுக்கு மரியாதையும், எழுதுவோருக்குச் சிறந்த புகழும் தோள் தட்டித் தேடி வந்து நிலைபெறும்.

இந்த நூல், இதழியல் துறையின் இளைய தலைமுறை யினர்களுக்கு மேற்கண்ட பயன்களை வழங்கும் என்று நம்புகிறோம். பத்திரிகைத் துறையில் பணியாற்றுவோருக்கு ஒரளவு உறுதுணையாக விளங்கும் என்பது நமது எண்ணம். படித்துப் பாருங்கள்! பயனுடையாதாக இருந்தால் பலன் பெறுங்கள்.

அன்பன் என்.வி. கலைமணி