பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #3

'அண்ணாதுரை எழுதிய கம்பரசம், குமரிக்கோட்டம், ஆரிய மாயை, வேலைக்காரி, ஒரிரவுகளா இலக்கியங்கள்?' என்று கேட்கும் எழுத்தர்களே!

இந்த இலக்கியங்களைப் படித்துப் படித்து இரவென்றும் - பகலென்றும் கூட நீங்கள் பாராமல், அறிஞரேறு அண்ணாவின் பாத கமலங்களுக்கு ஒரு கால கட்டத்தில் பூவாபிஷேகம் செய்தீர்களே! அதை இன்று மறந்து விட்டீர்களா?

அவ்வாறு செய்த ஒன்று கடலூரில்! மற்றொன்று தூத்துக்குடியில்! இது பழைய பல்லவியல்லவோ?

அந்த இலக்கியங்களையெல்லாம் ஒரு காலத்தில் உமது சிந்தனைக் கூடங்களிலே, விக்கிரகங்களாக வைத்து, இலக்கிய ஞானம் பெற்றதைச் சற்றே நினைத்துப் பாரும் - பிள்ளைகாள்!

ஏ - தங்கப் பழமே! நீர், தமிழ்நாட்டில் தங்கப்பழம் என்று காலடி எடுத்து வைத்திடக் காரணமாக இருந்தவையே - அந்த இலக்கியங்கள்தாம் என்பதைக் காலம் அறியும் நீர் இருந்த கட்சி புரியும்!

ஏன், கட்சி மாறா நாணயவாதிகள் அதை நன்குனர்வார்கள்! - ஊரறியும்! நாடறியும்! உமது உற்றமும் சுற்றமும் உணருமே!

'கம்பரசம்' - கம்பராமாயணத்திற்கு எழுதப்பட்ட ஒரு விமரிசன நூல்!

'குமரிக்கோட்டம்’ ஒரு சிறு நாவல்! சமுதாயத்தைச் சீர்திருத்தும் ஒரு குறுங்கதை!

'ஆரிய மாயை' - வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துத் தொகுப்பு!

அறிஞர் அண்ணாவினுடைய தமிழ் நடையால் - அது ஒரு தாழ்ந்த சமுதாயத்தையே படம் பிடித்துக் காட்டுகின்றது!

‘'வேலைக்காரி, ஓரிரவு' - நாடக உலகத்தின் திருப்பங்கள்!