பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

அன்று அவர் அப்படிப் பேசியபோது, அவதூறாக அன்று பதில் சொல்லிவிட்டு, இன்று அவர் இறந்துவிட்டார் என்பதற்காக அனுபல்லவி பாடுகின்றீர்களா?

எப்போது ஏற்பட்டது. உங்களுக்கு ஜீவா பக்தி? அறிஞர் அண்ணா சிலை அமைப்பின் போதா?

அண்ணா அவர்கள் மூக்கால பேசினால் என்ன? நாவால் சொற்களை அச்சடித்தால் - உமக்கென்ன?

மூக்கு மட்டும் இல்லையென்றால், காங்கிரஸ் என்ற உமது சொல்லுக்குள் இருக்கின்ற 'ங்'கன்னா என்ற ஒலியே வராதே!

'வாங்கறன்னே, போங்கறன்னே’ என்று பேசும் உமது தலைவரின் பேச்சே - மூக்கால் வரும் ஒலியல்லவா?

அண்ணா அவர்கள், மூக்கால் பேசினாலும், நாவால் பேசினாலும், அவை நயத்தகு மிகு நாகரிக முழு அறிவு வாக்குகளாக முகிழ்க்குமே! மேட புத்தி அறியுமா இந்த மேதைமையை:

சிலர் தாக்கு நரகல் நாக்கு! அவை மலர்த் தமிழில் இருக்கின்ற தேனைச் சுவைக்காது! அதற்கு அவர் என்ன செய்வார்?

'கல்கி' எழுதிய கதைகளைப் பெரிதுபடுத்திப் பாராட்டும் சிறுமையே!

அதே எழுத்துலக மேதை திரு.கல்கி அவர்கள்தான்்; வரலாற்று நாவலுலக்கு முடிசூடா மன்னரான அவர்தான்், அண்ணா அவர்களை அறிஞர் என்று பாராட்டினார்: அறிவாயே இதை!

உன்னால் பாராட்டப்படும் 'கல்கி'யால் போற்றிப் புகழப்பட்ட அண்ணாவுக்கு அமைக்கக் கூடாதா அறிவின் சின்னம்? - சிலை!

'ஓர்.இரவு' நாடகத்தைப் பார்த்த அந்தப் பேரறிவாளர்ப் பெருமகன் 'கல்கி', அண்ணா அவர்களைத் தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா என்றார்! இப்சன் என்றார்! கான்பூர்த்தி என்று

நெஞ்சாரப் பாராட்டினார்!