பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 17

"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனக்கும்' என்ற அண்ணாவின் இலக்கிய மேதைமைக்கு இலக்கணமாக அன்று இயங்கியது 'கல்கி'யின் எழுதுகோல் மாண்பு!

திரு. 'கல்கி' பெயரைக் கழறி, 'அவரைவிட அண்ணாதுரை பெரிய எழுத்தாளரா?' என்று கேட்கும் அவசரமே!

திரு. "கல்கி" அவர்கள், தன்னைவிடப் பெரும் எழுத்தாளர் களை அண்ணா அவர்களோடு ஒப்பிட்டு எழுதியதை, அன்று பாராட்டிக் கைதட்டி மகிழ்ந்தவர்களன்றோ நீவீர்!

தங்கப்பழமே...! உனது கயமை மன அரிப்புக்கு எதையும் எழுத - திரு.ஜெயகாந்தன் நாளேடா கிடைத்தது? அட அரிப்புப் பங்காளியே!

அந்த ஏட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருக்கும் அந்த - கம்யூனிஸ்க் காங்கிரஸ் அர்த்தநாரிக் கபாலம்தான்், ஆய்ந்து அனுமதி அளித்ததோ - உனது கருத்தை அந்த ஏட்டிலே - உமிழ!

காலம் சென்ற மேதை காமராசருக்குச் சிலை வைத்ததே - அறிஞர் அண்ணா அவர்களின் அனுமதியால்தான்்!

ஏன், இந்த வினாக்களை அப்போதே தொடுக்கவில்லை நீங்கள்?

'தமிழுக்கு காமராசர் என்ன செய்தார்? பெரிய பேச்சாளரா

அவர் - ஜீவாவைப் போல?”

- என்று, எதிர்க் கட்சியினர் எவராவது அன்று ஏகடியம் பேசினார்களா?

'கல்கி'யைப் போல, என்ன வரலாற்று நாவல் ஒவியங்களைத் தீட்டியவரா காமராசர்?

சிறுகதைச் சிந்தனைச் சிற்பியா? சினிமா - நாடக விமரிசனங்களின் வித்தகரா அவர்?

- என்று எந்தத் தமிழ் மகனும் உங்களைப் போல இழி புத்தியோடு அவரைச் சுட்டிக் கேட்கவில்லையே அன்று!