பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

'அண்ணாத்துரைக்கு ஏன் சிலை?' என்று கேட்ட 'ஜெயபேரிகை” ஏடே, அவருக்கு சிலை வைத்திடக் காரனங்கள் பற்பல உண்டு!

காங்கிரஸ் ஆட்சி மரத்தை வேரோடு துக்கி எறிந்தவர் அண்ணா.

இந்தியாவிலே உள்ள எல்லா மாநிலங்களையும் விட சிறப்பாக ஆட்சி நடத்தியவர்.

கற்கால மக்களைப் பொற்காலத்திலே உலா வரச் செய்தவர்!

வானத்தின் கீழே ஒளிர்ந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பண்பு களை - எழு ஞாயிறாகத் திகழ்ந்து, அறிவொளி பரப்பி வருபவர்;

தத்துவத்திலும் - அறிவியலிலும் ஒரு கருத்து உண்டு. அதாவது, "எந்தச் செய்கைக்கும் ஒர் எதிர் கொள்கை அல்லது செய்கை உண்டு' என்பதே!

அதனைப்போல, எந்தச் சிலை பக்கத்திலும் இன்னொரு சிலை இருக்க வேண்டும்! ஏன்?

அறிவிற்கே அண்ணாவின் சிலை என்றால், அடுத்த சிலை எதற்கு? யூகம் தேவை! எனவே, மன இருளை ஒட்டும் சிலை - அண்ணா சிலை!

இத்தகைய சிலை விழாவை நீங்கள் தடுப்பது ஏன்? அறிஞர் அண்ணாவின் அறிவு ஒளி, அன்பொளி, பண்பொளி, உலகத் தமிழ் மாநாட்டிற்கு வருகை புரியும் அறிஞர்களிடையே வான்

ட்டப் பரவி விடுமே என்ற பயத்தாலா?

'இமிடேஷன் காந்திக்கு ஏன் சிலை அமைக்கின்றோம் என்பதைக் கேள் - 'பேரிகையே'!

அறிஞர் அண்ணா சிலையை ஒரு நாள், காலத்தால் அறிவு வணங்கி - வாயார வாழ்த்தும் நேரம் வரத்தான்் போகிறது என்பதற்காக - இப்போதே சிலை அமைக்கின்றோம்!