பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? அறிஞர் அண்ணா எழுதிய 'ஆரியமாயை - ரோமாபுரி ராணிகள்' என்ற நூற்களை, ஆபாச இலக்கியமென்று ‘மெயில்', 'ஜெயபேரிகை” ஏடுகள் போராடுகின்றன!

தமிழ் இலக்கியத்தினுடைய - இலக்கணங்கள் அனைத்தும் - செய்யுட்களால் அமைந்தவை!

கட்டுரை வடிவில், எந்த பழைய இலக்கியமும் தமிழகத்தில் இல்லை!

ஆங்கிலத்தின் இலக்கியங்கள்கூட - செய்யுள் வடிவிலும் - கவிதை நடையமைந்த கட்டுரை வடிவிலும்தான்் அமைந்திருக்கின்றன.

'ஆரிய மாயை', வரலாற்று ஆய்வாளர்களின் தொகுப்புக் கருத்துகள்:

"ரோமாபுரி ராணிகள்', அழகிகளால் ரோம் நாடு வீழ்ச்சி பெற்றதன் வரலாறு:

இவை இரண்டும் - வரலாற்றுக் கட்டுரைகளின் விமரிசனத் தொகுப்பேயன்றி - இலக்கியங்கள் அல்ல!

இவற்றைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய பருவம் எப்போது?

எந்தப் பெரியாரை காங்கிரஸ்காரர்கள் தலைமேலே தூக்கி வைத்துக் கொண்டு கரகம் ஆடினார்களோ, அந்தப் பெரியாரின் தளபதியாக அண்ணா இருந்தபோது எழுதியவை!

ஒர் இன வளர்ச்சியை, மற்றோர் இனம் தாக்குமானால், தடுக்கின்ற அதனுடைய பலத்தை - சமுதாய சீர்திருத்த எழுத்தாளன் ஒருவன் எடை போட்டுப் பார்ப்பது அவனுடைய உரிமையாகும்! - கடமையுமாகும்!

அதற்கேற்ப, உலக வரலாறு - பல உண்மைகளை அந்த எழுச்சிமிக்க எழுத்தாளனுக்கு அளிக்கின்றது!

அத்தகைய உண்மையின், அழகிய உருவக் காட்சிகள்தான்் - 'ஆரியமாயை'