பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 33

வேண்டுமானால், வால்மீகி இராமாயணத்தைப் படித்துப் பார்! மேற்கூறிய ஒழுக்கக் கேடர்களாக அவர் பாடியிருக்கிறாரா இல்லையா என்று உணர்!

செந்நாப் போதார், தனது நூலின் மூலக் கரு உருவைத் தன்னுடைய அறிவிலிருந்தே சிந்தித்துப் பெற்றவர் அநுபவ ஊற்று:

அதன் வழியாக மனிதத்திற்கு நீதி நூலைத் தயாரித்து - அவனி வாழ் இனங்களும் - மக்களும் - நாடுகளும் நன்கு வாழ்ந்திட, அவ்வவ்வ மொழியின் கரங்களிலே தவழவிட்டத் தன்னிகரற்ற மேதை!

ஆனால், கம்பன் ஓர் காவியக் கர்த்தா. அவன் எழுதியது இராமாயணப் பாத்திரப் படைப்புகளைக் கொண்ட இராம காதை:

கம்ப இராமாயணம் வேதமல்ல! அது ஒர் இதிகாச இலக்கியம்! தமிழர்கள் கண்டிராத கற்பனை கலந்த தேவ வரலாறு கூறும் ஒரு காவியம்:

வேத நூல்களையே விமரிசிக்கின்ற காலம் அல்லவா இது? இதற்கிடையே கம்பனானால் என்ன? வேறு எந்த கொம்பனானால் என்ன?

கிறித்துவ மக்களின் பைபிள் வேதத்தையே மிகக் கடுமையான விமரிசனத்திற்கு ஆளாக்கியவர் - இராபர்ட் கிரீன் இங்கர்சால்!

இயேசு நாதரையே A Good Man என்று அவர் பாராட்டினார். ஆனால், அவரைக் கடவுள் என்பதை ஏற்க மறுத்தார். இந்தியாவில் இராஜாராம் மோகன்ராயும் போராடி மறுத்தார்.

கிரேக்க நாட்டுக் கடவுள் தத்துவங்களையே அக்கு வேறு ஆணி வேறாக விமரிசனம் செய்தவர் - சாக்ரடீஸ்!

இங்கிலாந்து TLGు ஷேக்ஸ்பியரை விமர்சிப்பதைப் போல, கம்பனைத் தமிழ் நாட்டிலே விமர்சிக்கின்ற நேரத்தில், கறிவேப்பிலையாக மிதந்ததே கம்பரசம்! அவ்வளவுதான்்!