பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 35

தேவ காவியம் இயற்றியவர் கம்பர் அதனால், அவர் பின்னாலே பெரும் பக்தர்கள் கூட்டமே திரண்டு நின்று வாதாடியது.

அதே நேரத்தில், இராம காதையில் - இராமபிரான் உட்பட்ட அவரது குடும்பமும் - இறையருள் வழங்கும் ஒரு சக்தியாக எண்ணப்பட்டது - அது விளம்பரமுமானது!

பிறந்த மனிதன் - மறையும் வரையிலமையும் வாழககை வழி நெறிமுறைகளை வகுத்தவர் திருவள்ளுவர்!

அதனால், வாழ வகையறியாக் கூட்டத்தினர், ஆன்மிகப் பேரின்பப் போதையால் - அப்போது தமிழ் மறையை அலட்சியப்படுத்தினார்கள்!

அதை நினைவுபடுத்திட யாருமில்லை, அவர்களுக்கு: அதனால் மறதி என்ற ஆன்மிக மர்மக் குகையிலே அவர்கள், மூடி மறைக்கப்பட்டு விட்டார்கள்!

திருக்குறள் மாநாட்டை இந்த இருபதாம் நூற்றாண்டில் நடத்தியவர்களைக்கூட கேலி பேசினர் பலர்! அவர்கள் அனைவருமே கம்பரது பக்தர்கள் அன்று!

அவ்வாறு, கேலி செய்தவர்கள், கம்பர் காவியத்தை ஐயந்திரிபற அறிந்தவர்கள்தான்ா என்ற வினாவை, அண்ணா அவர்கள் தனது ஆய்வுச்சாட்டையால் சுண்டி எழுப்பிச் சோதனை செய்தார்:

'அறிவோம் - அறிவோம்’ என்று - அவசர கோலமாய், அகம்பாவ ஞானமாய் - ஆணவக் கோளமாய் புறப்பட்டனர். சிலர்:

செஞ்சொற் செல்வர் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களும் - தமிழ் பலமும் நா' வளமும், ஒன்று சேர்ந்த வாத வன்மை நயத்தோடு நாவாடும் நாவலர் சோம சுந்தர பாரதியாரும் சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களிடம் வாதாட வந்தனர் - கம்பர் காவியத்திற்காகக் கச்சை கட்டிக் கொண்டு!

சேலம் நகரும் - சென்னை மாநகரும், சொற்போர் களங்களாக மாறின. அந்தக் காவிய வில்லேருழவர்களது வாதங்கள் - தீப்பொறி அம்புகள் போலப் பறந்தன -

போரிட்டன! - முடிவு?