பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 41.

நம்முடைய முகத்தின் அசிங்கத்தைக் கண்ணாடி காட்டுமானால், - அது கண்ணாடியின் குற்றமல்ல!

முகத்தின் குற்றமாகும்! மனிதத்தின் மீது படிந்துவிட்ட சில மாசுகள் அந்த எதிர்ப்புப் பண்புகள்!

கம்பராமாயணம் என்ற முகத்திற்குக் கம்பரசம் ஒரு கண்ணாடி - அவ்வளவுதான்்! அதைப் பார்க்கும் நோக்குக் கேற்ப அது பளபளக்கும் - ஆடிக் காட்டிடும் - எதிரொலிக்கும்:

கம்பரது காமச் சுவையை எடுத்துக் கூறும் கம்பரசக் கர்த்தா அண்ணாவுக்கா சிலை என்றால், அந்தச் சுவைகளைத் தனது காவியத்திலே செருகி நடமாடவிட்ட சுவிச் சக்கரவர்த்தி கம்பருக்கேன் சிலை? கேட்பது தவறா?

அவ்வாறு விளித்து, தமிழோடு அற்புதமாக விளையாடிய கம்பருக்குச் சிலை வைப்பதைத் தமிழறிந்த எவனும் வழுக்கி விழுந்தும் கூடத் தடுக்கமாட்டார்கள் - அப்படித் தடுப்பவன் தமிழனும் ஆகான்!

கம்பரசம் எழுதிய கண்ணியவான்தான்் - அறிஞர் அண்ணா அவர்கள்தான்் - கம்பர் பெருமானுக்கும் சிலை வைத்தார்: காரணம் - தமிழறிந்த - தமிழாய்ந்த தலைவர் அவர் என்பதால்!

இலக்கிய நோக்கோடு அண்ணாவை நோக்குவோர், அவரை இலக்கிய எதிரியாகக் கருதுகிறார்கள்! இலக்கிய விமரிசனக் கர்த்தாவாகவும் அவரை நினைப்பதில்லை! எழுதுகின்ற இலக்கியனை விட - விமர்ச்சிப்பவன் வித்தகனாக விளங்கும் தகுதி வேண்டுமே!

காரணம், விமர்சன இலக்கணமே புரியாதவர்கள்! அதன் அருமை பெருமை தெரியாதவர்கள் அவர்கள்! அதனால், அண்ணாவை அரை வேக்காட்டுச் சிந்தனையால் தாக்குகின்றார்கள்:

அறிஞர் அண்ணாவுக்கு சிலை அமைக்கின்ற நோக்கமே, அவர் ஒர் இலக்கியக் கர்த்தா என்ற நினைப்பிலே அல்ல!

எண்ணற்ற நூற்களை - எல்லாத் துறைகளிலும் எழுதிய ஒர் எழுத்துலகச் சிந்தனையாளரை - இலக்கிய மறுமலர்ச்சியாளர் என்று ஏற்காதவர் எப்படிப்பட்டவராக இருப்பர்?