பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

அவ்வாறு ஏலாதவர்களை தாயுமான சுவாமிகள் பாடியபடி, 'கல்லாத பேர்களே நல்லவர்கள் - நல்லவர்கள் - கற்றும் அறிவில்லாதபோது' என்ற அந்த பட்டியலிலே சேர்ப்போம்! அது போகட்டும்...!

அப்படிப் பார்த்தால், மவுண்ட் ரோட்டிலே உள்ள சிலைகள் எல்லாம், என்னென்ன இலக்கியங்களை எழுதிக் கிழித்து விட்டன? பிறகு, ஏன் சிலை?

அரசியல் வித்தகர் திரு. சத்திய மூர்த்தி அவர்கள் ஒரு கலை ரசிகரே தவிர - நாவலரே தவிர - வேறு என்ன இலக்கியங்களை எழுதித் தள்ளிவிட்டார்! பிறகு அவருக்கு ஏன் சிலை?

'கம்பருக்கு ஈடாக அண்ணாதுரையைத் தரம் பார்ப்பதா?” என்று கேட்கும் "மெயில்' பத்திரிக்கையே!

கதைக் கர்த்தா கம்பருக்கு வசன நாடகம் எழுதத் தெரியாது - எழுதியதில்லை! அண்ணா, நாடக உலகிலே பெர்னாட்ஷா - அதற்காக சிலை!

காவிய மேதை கம்பர் நடித்து எவன் பார்த்தான்்? வேண்டுமானால், கவிதையிலே நடிக்கலாம் அவர்! அதற்கா சிலை? என்று கேட்காதீர்!

அறிஞர் அண்ணாவுக்கு சிலை நிறுவுவதைத் தடுக்கும் நீங்கள் கழுத்தறுப்பான் சுற்றமானால், நாளை சோற்றுக்கும் - துணிக்கும்கூட அலைவீர்! நீங்கள் மட்டுமல்ல - உமது சுற்றமும் - பிள்ளைக் குட்டிகளும் - ஜாக்கிரதை!

கம்பர் பெருமான் நாவலர் அல்லர் - அவருக்குப் பேசத் தெரியும் என்பதற்கு! கம்பனார் எழுதுகோல், நா'வாக மாறி அவர் எழுதிய கம்பராமாயண அகலிகைப் படலத்தில் அலர்' எழுப்புவதை - நாம் காண்கிறோமா! - இல்லையா?

அறிஞர் அண்ணா நாவுக்கரசர்! அவனியைத் தனது காலடியிலே மயங்க வைக்கும் அப்பர் பெருமான்!

இங்கே மட்டுமல்ல, கற்றார் அவையிலே, நா. நயத்தோடு நடமிட்டவர் - அமெரிக்க மண்ணிலே!