பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 4?

அதை விட்டுவிட்டு - வேறு கோணத்திலே அக் கவிஞர் கூறும் பொருளை ஆய்வு செய்தால், அது ஆராய்ச்சி புரிபவரின் போக்கே தவிர, கவிஞருடைய நோக்காகாது:

'மாடு இழந்தேன்' என்று ஒரு தொடர் வருவதாக வைத்துக் கொள்வோம்!

'ஜெயபேரிகை” ஏடு, இதற்கு என்ன பொருள் கொள்ளும்?

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான காளை மாட்டை இழந்தேன் என்று கூறும்! இல்லையா? காரணம் 1967 - தேர்தலில், பேரிகை சுமந்த மாடுகளை மக்கள் விரட்டியடித்து விட்டார்களே என்ற கோபமும் வரும் இல்லையா?

அதுவல்ல அதற்கு அர்த்தம்! மாடு என்றால் செல்வம் என்ற ஒரு பொருளும் உண்டு!

'மாடு இழந்தேன்’ என்கின்ற போது, அதிலே இரண்டாம் வேற்றுமை உருபு மயங்கிக் கிடக்கின்றதே, புரியுமா பேரிகைக்கு?

'காடு சென்றேன்’ என்ற மற்றொரு தொடரும் வருவதாகக் கொள்வோம்!

இதற்கு என்ன, பேரிகையே உரை காண்டாய்?

'காடு சென்றேன்' என்று அறைகின்றபோது, காட்டிற்குச் செல்கிறேன் என்ற நான்காம் வேற்றுமை உருபு எப்படித் தொடர்ந்து வருகின்றதோ - அதனைப் போல!

மாடு இழந்தேன் என்று கூறினால், செல்வம் இழந்தேன் என்று பொருளாகும்! இது இலக்கண மாயாஜாலம்! இதைப் படித்ததோ - இல்லையோ பேரிகை:

ஆனால், ஜெயபேரிகை அழுக்காற்று மூளை, காளை மாட்டை இழந்தேன் என்ற பொருளையே திடுதிப்பென்று கூறி, எதிரியை மடக்கும்! இல்லையா?

திருப்பி, என்னய்யா இது என்று கேட்டால், வெகு ஜன யதார்த்தம் - பதார்த்தம் என்றெல்லாம் கூறி பாமர மக்களைக்

குழப்பும்!