பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

1935-ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. அந்த மாநாட்டின் தலைவர் மறைமலையடிகளார். மாநாட்டில், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், நாவலர் வேங்கடசாமி நாட்டார், சோழவந்தான்் அரசன் சண்முகனார், ஞானியாரடிகள் போன்ற மேதைகள் எல்லாம் பங்கேற்று ஞானவுரை ஆற்றினார்கள்.

மாநாட்டின், இறுதி நாளன்று மறைமலையடிகளார், 'தனித் தமிழ் வளர புலவர்கள் வழிகாட்ட வேண்டும்’ என்று, தனது முடி வுரையை ஆற்றிக் கொண்டிருந்தார், பண்டிதமணி குறுக்கிட்டு மறுப்புக் குரலை எழுப்பும்போது, 'ஜலம்’ என்ற சொல்லில் 'ஜ' எழுத்தை அகற்றிவிட்டு 'சலம்’ என்று எழுதினால் தனித் தமிழ் வளர்ந்து விடுமா! 'பூஜை' என்ற சொல்லில் 'ஜ'வை நீக்கி பூசை என்று கூறுவதுதான்் தனித் தமிழ் இயக்கமா?” என்றார்.

அருணகிரி நாதர் ஜலமொடு பூவும் சேர்ந்து பூஜை செய்தறியேன் என்றார்? அவர் தனித் தமிழ் இயக்க விரோதியா? குமரகுருபரர் சலாம் என்ற சொல்லை ஆட்சி செய்துள்ளார். அவர் தனித் தமிழ் பகைவரா? என்று ஆவேசத்தோடு மறைமலையடிகளார் பேச்சை மறுத்தார்.

உடனே மறைமலையடிகளார், 'யானை வழுக்கி விழுந்தால் கூட, அதற்குத் தான்் பெருமை! அதற்காக, நாமும் தெரிந்தே விழலாமா? எதிர்கால மக்களால் எழ முடியுமா?” என்று பண்டிதமணி கருத்தை மறுத்து, தனது கருத்தை அடிகளார் வெளியிட்டார்.