பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 53

உனக்குத் திருக்குறளின் 97-வது அதிகாரம் எள்ளளவாவது இருந்தால், ரகுமான் எழுதியதாக நீர் கூறும் கவிதை வரிகளைக் காட்டு பார்ப்போம் !

திடீரெனப் பெரும் பயனஒசை எழுப்பும் பேரிகையே! கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து உனது கோணிப் புளுகுகளைக் கொட்டி அளக்காதே!

அட...! 97-வது அதிகாரத்தை உதறித் தள்ளிவிட்டு 24-வது அதிகாரத்தைத் தேடி, இப்படியா கடை கடையாக தெருத் தெருவாக ஒடுவது?

சோறு அற்றவனானாலும் அவனிடம் நூறு மட்டும் இருந்தால், 99 - ஆகவே அவன் என்றும் உயர்ந்து நிற்பான்! ஆனால், நீ தான்் நூற்றெட்டாளன் ஆயிற்றே!

திரு. அப்துர் ரகுமான் உலகத் தமிழ் மாநாட்டில் தான்் பாடிய அக் கவிதை வரிகளை, அவர் தனது புலமை, இலக்கண இலக்கிய, அரசியல் நடைமுறை மாயா ஜாலங்களால், ്ജ് வியப்புமிழும் பொருட்களோடு பதம் குலைத்தார்:

மாநாட்டுப் பெருமக்களும், பார்வையாளர்களும் அறிவாளர் களும், தங்கள் அலையலையான கையொலிகளால் வங்கக் கடலலையினையே புறம் கண்டார்கள்!

இந்தி, இரா, இனி - விளையுமா அது? தமிழ் மண்ணில் மீண்டும்! என்று, ஒரு முறை பாடி அற்புதம் செய்தார்:

அதாவது, இந்தி மொழி இந்த மாநாட்டின் முடிவிற்குப் பிறகு,

இருக்காது என்றார்! என்னவாயிற்று? கவிஞன் வாக்கு, கடவுள் வாக்காமே! பார்ப்போம் - அதன் போக்கைப் பொறுத்திருந்து!

இந்தி மொழி இனிமேல் விளங்காது - தமிழ் மண்ணில் விளையாது என்று சொல்லாடினார் - அக் கவி அரங்கத்தில்:

செஞ்சொற் ரசிகர்கள் - அனைவரும் செம்மாந்து ஆரவாரமிட்டார்கள்.