பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. “கலைஞர் கருணாநிதி எழுதிய

சிலப்பதிகாரக் காப்பியம்! -

தமிழுக்கு நேர்ந்த அவமானம்!"

நிமிர்ந்த குன்றின் மீது நிதான்ம் இழக்காத மேகக் கூட்டம் கனவு காண்கின்ற நேரத்தில், கீழே உள்ள கவிஞனொருவன் அதைப் பார்த்து விட்டால், மேகத்தை தேவனாக்கி விடுவான்!

வெறும் திருமணத்தால் மட்டும் பிறந்த பிள்ளைகள் அல்லர் - கவிஞர் பெருமக்கள்!

அவர்களுடைய அறிவின் ஆணிவேர், அந்தராத்மாவில் ஊன்றி விடுகின்றது!

கவிஞர்களைக் கணிய வைக்கின்ற கடமை - பொறுப்பு - இயற்கையின் அருளாகும்!

மையத்தின் வடிவமாக, இவ்வாறு தன்னையே உருவகப்படுத்திக் கொள்ளும் ஒரு கவிஞன், அழுக்காற்றுச் சேற்றில் அழுந்திச் சாவதில்லை!

அத்தகையக் கவிஞனுடைய வாழ்க்கை, நடைபாதையில் பிச்சையெடுக்கும் ஒரு தொழு நோயாளியின் வாழ்க்கை அல்ல!

ஆழமான ஆழியில் மூச்சடக்கி எடுக்கின்ற முத்தும் - கவிஞனும் - எடையில் - நிறையில் ஒத்தவர்கள்!