பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $1

இந்த மனிதனுடைய எழுத்துக்கள், புதுச்சேரியிலும் பெங்களுரிலும் விற்பனையாக வேண்டிய பொறாமை வாசனை வார்த்தைகள்!

தமிழகம் மதுவிலக்கால் அவற்றை ஏற்காதபோது, இந்த கடுவனுக்குக் கடுங்கோபம் கனலாவது இயற்கைதான்ே!

கலைஞர் கருணாநிதியின் சிலப்பதிகாரக் காப்பியம் - கடல் தாண்டி அமெரிக்கா செல்கின்றது!

இதற்குக் காரணம், அவருடைய தனியாத தமிழ் வேட்கை

எழுத்தின் வேகம்!

கருத்தின் ஆழம்!

கற்பனை நயம்!

சொல்லாட்சி அற்புதங்கள்!

சித்திரத் தமிழின் சிங்கார நடை!

காதல் கட்டங்களில், அவர் எழுதும் பூந்தமிழ்ச் சொற்கள், மலர் மழையையே கொட்டும்!

வீர அரங்கத்திலே அவர் நடமாட விடும் புற நானுற்றுத் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும், தமிழரது மறப் பண் பாடிடும் சேரன் செங்குட்டுவனின் அனல் மூச்சுக்களாக மாறும்!

அவலச் சுவையிலே, கலைஞரது தமிழ் நடை, நாடகம் பார்ப்பவனின் இதயத்தை உருக்கும் தங்க நிகர் சொற்கள்.

இத்தகைய இலக்கியத் தமிழ்ச் சக்தி கொண்ட சிலப்பதிகாரக் காப்பிய நாடகம், அமெரிக்கா செல்வதிலே தவறு இருக்க முடியாது.

தமிழ்த் தொண்டாற்றத் தன்னையே காணிக்கையாக்கிக் கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்குத்தான்், கலைஞருடைய சிலப்பதிகாரக் காப்பியத்தின் அருமை - பெருமை தெரிய நியாயமுண்டு! -

கிரந்தி நோயால் அவதிப்படுகின்ற எழுத்துக்களைச் சிந்தனையிலே ஏந்திக் கொண்டிருப்பவர், இந்த சிலப்பதிகாரக்