பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

காப்பியம், வானுர்தியிலே முதல் பயணம் செய்வதைக் கண்டால், கிறுகிறுக்காமல் நிதான்மாகவா இருப்பார்?

கவிதை அரும்பாகத் திரை உலகுக்குள் காலடி வைத்தபோது, திரு. கண்ணதாசன் ஓர் ஆடு தொடா இலை!

முதன் முறையாக மக்கள் சந்தையிலே அதை வாழை இலையாக உருவாக்கிப் பந்தலிலே வைத்தவர் கலைஞர் திரு. கருணாநிதி!

திரு. கண்ணதாசன் எருக்கம் பூ முல்லை மலர் போல பக்குவப் படுத்தி அதைப் பூக்கடையில் காட்சி பெற வைத்தவர் மூனா கானா!

அந்த எருக்கம் பூ தப்பித்து, மறுபடியும் ஒரு பிரம்மச் சாரியின் கழுத்திலே போய் பூ மாலையாக விழுந்துவிட்டது.

கல்லுக்கும் மலருக்கும் தொடர்பு உண்டு!

சிலை வணக்கம் செய்பவர்கள், இஃதை நன்கு ឧ...ាអំនាសក្រៅ

இந்திய தேசியப் பிரச்சினையில் 1987க்குப் பிறகு சிதில மடைந்த சிலை காமராசர் எருக்கம்பூ, அவருக்கு மாலை யாகாமல் வேறு யாருக்கு ஆகும்?

அத்துமீறிய அழுக்காறு, கவிஞர் கண்ணதாசனின் அறிவைக் கப்பிக்கொண்டது!

அதனால்தான்், தவசக்தி நாளேடு வெளியிடும் - "கடிதம்' என்ற ஏட்டில், 24.1.68-ஆம் நாளன்று கண்டபடி தாக்கி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன் - பொதுப் பணித்துறை அமைச்சர் கலைஞரை!

'கருணாநிதியின் பூம்புகார் சினிமா வசனத்தை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்தார்கள்!'

அதை 'சிலப்பதிகாரக் காப்பிய நாடக'மென்று வெளி நாட்டுத் தமிழர்களிடையே விநியோகித்தார் அண்ணாதுரை?”

'தமிழுக்கு நேர்ந்த இந்த அவமானம், வேறு எந்தக் காலத்திலும் நிகழாத ஒன்றாகும்'