பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $3

- என்று திரு. கண்ணதாசன் 'நவசக்தி'யின் இணைப்பு ஏடாக வெளியிடும் தனது "கடிதம்' என்ற நாளேட்டில் எழுதினார்:

தமிழ் நாடகக் கலையின் மறுமலர்ச்சி முன்னோடியாக இருக்கின்ற அறிஞர் அண்ணா அவர்கள், சினிமா வசனத்தில் மிகச் சிறந்த சமுதாய புரட்சியைச் செய்தவர்!

இந்த மறுமலர்ச்சி, தெனாலிராமன் சினிமா வசனம் எழுதிய சிந்தனைக்குப் புரியாவிட்டால் - அது யார் தவறு?

எனக்கும் தலை இருக்கிறது என்பதைத் தம்பட்டம் அடித்துக் காட்டுபவர் தவறா? அல்லது தலையை வழங்கிய இயற்கை யின் தவறா?

இளங்கோவடிகளது இசை, நாடக, ஆன்மிக, தெய்விகப் பண்பாட்டுத் தமிழ் உணர்வு ஆய்வு, அதிகம் இல்லாமல் அல்லது மிகக் குறைவாக அமைந்திருக்கலாம்!

அதற்காக, அதை இளங்கோவடிகளது நாடக மறுபதிப்பு என்பதிலே குறை காணமுடியாது!

ஜூபிடர் பிக்சர்ஸ் எடுத்த கண்ணகி ஒரே வைதிகப்புடுங்கல் படம்! ஆனால், அதற்கு வசனம் எழுதிய இளங்கோவன் திறமையை என் போன்றவர்களால் பாராட்டாமல் இருக்க முடியாது.

கலைஞர் பூம்புகார், பகுத்தறிவாளர் மட்டுமே பார்க்க வேண்டிய படம்! ஏனென்றால், பொற்கொல்லர் சாதிச் சண்டைக்குச் சச்சரவு விளைவிக்காத விதை!

கலைஞரது கைவண்ணம் பெற்ற பூம்புகார் திரைப்படத்தை இன்றைய தமிழறிஞர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. உட்பட - அனைவருமே பார்த்துப் பாராட்டினார்கள்.

திரு. கண்ணதாசன் அறிவுக் கண்களுக்கு இந்த காட்சிகள் புலப்படவில்லையா? புலப்படும்! தெரிந்தும் கலைஞரைத் தாக்குகிறாரே, குறையறிவோடு விமர்சனம் புரிகிறாரே - ஏன்?

அதுதான்் அழுக்காறு! அதனால்தான்், திருவள்ளுவர் பெம்மான்கூட அதுவே சாலும் என்றார்!