பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨登 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

ஏனென்றால் - அறிவை வணங்கி, வாழ்த்தி, வரவேற்கும் சான்றோர்கள் அவர்கள். நல்லிசைப் புலவர்கள் பலர் - நாடாளும் நாயகர்கள் இடத்திலே மந்திரக் கிழமை பெற்று விளங்கியவர்கள்:

புலமை ஐயங்களுக்குப் புலமையால் போராடுவார்களே தவிர, புன்மைப் பூசலால், சுயநல அழுக்காற்றால், அரசியல் காழ்ப்பால், ஒட்டக்கூத்தர் பெருமானைத் தவிர, வேறு எந்தப் புலவரும் போராடிக் கொண்டதாக புலவருலக வரலாற்றில் இல்லை!

ஊதால், உறுப்பால், தொழிலால், 'ந' எனும் பட்டத்தால் தொன்மையால், வன்மையால், சிறப்பால், மன்னர்களால், வணிகர்களால், வேளாளர்களால், இசை வல்லுநர்களால், கணித மேதைகளால், அன்பால், பண்பால் வாழ்ந்த புலவர்களைக் கொண்டதுதான்் புலவருலகம்! புரிந்ததா கவிஞரே!

கவிஞர் கண்ணதாசனாரே, நீர் இந்தப் பட்டியலில் எந்த இடத்தைக் கைப்பற்றி வாழ்ந்து வருகிறீர்? சற்றே சிந்தித்துப் பாருமய்யா?

கேசவனார், நல்லச்சுதனார், கண்ணகனார் போன்ற சங்ககாலப் புலவர்களைப் போல - நீரென்ன இசை இலக்கண நூற்களை எழுதி இசைபட வாழ்கின்றீரா?

மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார், போல ஆயுள் நூல் பயிற்சி பெற்றுள்ளிரா?

கணியன் பூங்குன்றனார், கணி மேதாவியார் போல கணித நூல் புலமை உண்டா உம்மிடம்?

திரு. ஈ.வே.கி. சம்பத் அவர்களுடன் நீரும் சேர்ந்து தமிழ்த் தேசிய கட்சியை ஆரம்பித்தபோது, உமது பணமெலாம் கட்சிக் காகச் செலவான பிறகு, மீண்டும், மீண்டும் கடன் வாங்கிக் கட்சிக்காக செலவு செய்ய வேண்டி இருக்கிறதே என்ற, உமது தலை மயிரை அந்த நேரத்தில் நீரே பிய்த்துக் கொண்டே சங்க கால கவிஞர் உலோச்சனர் போலத் திரிந்தது நீர் அல்லவா?