பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8, மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், புலவர் குழுவோடு, அறிஞர் அண்ணா அவர்களையும் சேர்த்து வரவேற்றுப் பேசும்போது, 'புலவர் களுக்கு எல்லாம் புலவரான, புலவர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களே!' என்று 'ஏ'கார ஒலியோடு நிறுத்தினார்.

அருகிருந்த வங்கக் கடலலைகள் அமைதி காக்க ஊமை யாகின: தீவுத் திடலில் கூடியிருந்த மக்கட் கடலலைகள் பேசின. மாநாடு ஒலி பெருக்கிகள் அதை எதிரொலித்தன. தேம்பித் தேம்பித் திணறின மாநாட்டின் கூரையாக வேயப்பட்டிருந்த தென்னங் கீற்றுகள் சில:

அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் தனது அருந்தமிழ் அமுத உரையாற்றும்போது, 'நான் புலவன் அல்லன்! புலவர் பெருமக்களின் நண்பன்' - என்று அடக்க மாக அறிவித்த அறிவின் பெருந்தன்மை எங்கே? புலவர்களை அலி என்று வாதாடுகின்ற சினிமா கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்களின் சிறுந்தன்மை எங்கே?

'தமிழ் வளர்க்கும் புலவர்களை - தமிழ்மொழியைத் தாழ்வாக நினைப்பவர்களை, அவ்வாறு உரைப்பவர்களை, எழுதுபவர்களை - நான் எனது முதல் பகைவர்களாகவே கருதுவேன்'

- என்று வீர முழக்கமிட்ட கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் ரத்தம் ஒடுபவன் யான்! அவரது வாரிசய்யா கவிஞரே!

அதனால்தான்், புலமை ஞானத்திற்காகப் போராடுகின்றேன் அவர்களது அறிவு மானத்தைக் காத்திட !

புலவர் நெஞ்சம் புகழ் பூக்கும்போது, புத்துணர்ச்சி மலரும் இலக்கியம் ஒன்று நாட்டிலே பூக்கும் - மனக்கும்! அதே நெஞ்சு புண்படும் போது, கண்ணதாசனாரே - நீர் என்ன செய்வீர்? புன்னாகவராளி பாடுவீரா?

புலமையும் திறமையும் புகுந்த போட்டி ஒன்றிலே, பெரும் புலவர் மகாவித்வான் தியாகராச செட்டியாரும், இராமநாதபுரம்