பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

'போனால் போகட்டும் போடா' என்ற உமது பாடலுக் கேற்ப, உமது எழுத்து அம்போ என்று முக்காடு போட்டுக் கொண்டு ஒடுமளவிற்கு, எமது எதிர்ப்புக் கட்டுரை எதிரொலிக்கும் ஜாக்கிரதை!

கவிஞரே!

கண்ணதாசனாரே! நாக்கு ஒரு நெருப்பு: அது உம்மை மட்டும் சுடாது! பிறரையும் சுட்டே தள்ளும்! சுட்ட வடு சுடுகாடு போனாலும் மாறாது! ஆறாது! நினைவிருக்கட்டும்!

மனசாட்சி இருக்கின்ற மகத்தான் சக்தி மனித ஜீவனுக்குள்ள ஆதாரமாகும்!

வெளவெளத்துப் போன வாழ்க்கையில் திசை தெரியாமல் தப்புகின்ற எந்த உயிரும் - தன்னை உருவாக்கிய தமிழ்ப் பண்புக்கு வணக்கம் செலுத்த வேண்டும்!

தமிழகத்தில் பிறந்த எந்தப் பிறவியாக இருந்தாலும் சரி, அதற்கும் தன்மானம் உண்டு. ஏனென்றால், இந்த நிலத்தின் மாண்பு இப்படி:

§ {

நல்லோர் நெஞ்சத்தை நோக வைத்தேனோ என்றார் வள்ளல் பெருமானார்!

இது தன்னையே நொந்து பாடும் - தன்நிலை அறிந்த தத்துவம்! ஆனால், மிக நன்றாகப் பிறரை நோகடிக்கிறீர் நீர் அந்தத் துறையிலே மகா வல்லுநர், முதற் பரிசு பெறக் கூடியவர்.

காலம் போகும் - வார்த்தை நிற்கும்”

கல்லறை போகின்ற நேரத்தில், உமக்காகக் கண் கலங்கு பவர்களை, தமிழ்நாட்டில் சேர்த்துக் கொள்ளும் கவிஞரே!

இனியாவது திருந்தி இதுபோன்ற சிற்றின்ப நெறியிலே இயங்காதீரய்யா!

சூடான அரசியல் உணர்ச்சிக்கு ஆட்பட்டு, மற்றவருடைய சுய மரியாதைகளில் கை வைக்கக் கூடாது. அதைப் பரிதாபமாக, அடிக்கடி ஆற்றுகின்றிரே!