பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 95

தமிழ்ப் புலவர்களை நீர் கண்டபடி ஏசியதால், எனது எழுது கோலின் மனம் தாளவில்லை. அதனால் உமக்கு சூடாக எழுதும்போது, உம்மைச் சுட்டிக் காட்டும் நிலை ஏற்பட்டு விட்டது - வருந்தற்க இதுவும் ஒரு எழுதுகளம் போர்முறை தான்ே!

கற்றதின் அடையாளம், களங்கமற்ற ஒரு சின்னத்தை நாட்டுக்குக் காட்ட வேண்டும். அதுதான்் தமிழ் மண்ணின் பரம்பரை, பிறப்பின் அழகு - இலட்சணம்!

அடக்கத்தின் மீது கட்டப்பட்டவனின் வாழ்க்கை, எதிர் காலத்தில் - உலகிற்கே ஆதார சுருதியாக மாறுகின்றது. இதற்கு சான்றாக எண்ணற்றோர் வாழ்ந்த மண் - இந்தத் தமிழ் மண்:

காண்பவரை ஈர்க்கும் மலராக மனிதன் மாற வேண்டும்.

தண்ணிரை அள்ளிக் குடித்து விடுவதினாலேயே, கடலை வென்று விட்டேன் என்ற மமதை வாதம் யாருக்கும் தலையாட்டம் போடக் கூடாது.

உணவுக்கு உறுதுணையாக இருக்கும் நெருப்பை - மேலும் உக்கிரப்படுத்தி எரியவிடக் கூடாது. அது ஆபத்து உமக்கு மட்டுமல்ல ஊருக்கே!

அறிவில்லாதவன் என்று எனது எதிரியைக் கூட மறந்தும் சொல்ல மாட்டேன். தன் வலியும் புரிபவன் - மாற்றார் வலியையும் நான் அறிந்தே எழுதுபவன்!

அறியாமை என்றால், அதனை வெளிப்படையாகவே நான் முரசு கொட்டி அவனிக்கு அடையாளம் காட்டுபவன்!

தமிழ்ப் புலவர்களை பேடி என்றும், குரங்கு என்றும் ஆனா? பெண்ணா? இரண்டுக்கும் பொதுவா? பன்றியா? நாயா? என்றெல்லாம் எழுதிய கவியே, புலவர்கள் நாட்டின் ஞான ஒளிகள்! அவர்களை அவமதிக்கும் நாடு அறியாமை சுடுகாடு: அவ்வளவுதான்்!

தமிழ் படித்தவர்கள் புலவர்கள்! அவர்கள் உடலிலே

ஒடுவதெல்லாம் தமிழ் உணர்வுகளே - பண்பாடுகளே! பழக்க வழக்கங்களே!