பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்O34

கண்டறியவும், அழகை ஆராதிக்கவும் இந்த நூலை எழுதுவதாகக் குறிப்பிடுகிறான். அப்பணிகளைச் சிறந்த முறையில் செய்து முடிக்க நரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு, தன் பரிதாப முடிவைத் தானே தேடிக் கொண்ட ஓர் ஆன்மாவைச் சந்தித்து, அதன் உள்ளத் திருட்டையும், வலிப்புப் பிதற்றல்களையும் அறிந்து கொள்ள விரும்புவதாகக் கூறுகிறான். அந்தப் பரிதாப ஆன்மா வேறு யாருமில்லை; இவனேதான், இப்பயணம் இறப்பிற்குப் பிறகு மேற்கொள்வது போன்ற ஒரு கற்பனை.

‘வலிப்புப் பிதற்றல்’ என்று அவன் குறிப்பிடுவது இரவும் பகலும் அவன் உள்ளத்தை ஓயாமல் வருத்திக் கொண்டிருக்கும் இரு குற்றங்கள், ஒன்று வெர்லேனுடன் கொண்டிருந்த தகாத உறவு; மற்றொன்று 'சொல் ரசவாதம்* (Verbal Alchemy) பற்றியது. இத் தொகுதியில் அடங்கியுள்ள கவிதைகளில், சீரான சந்தமோ, எதுகை மோனையோ இல்லை. எதிர்பாராமல் மின்னும் படிமங்களை வரிசையாக அடுக்கிக் கவிதை விளைவுகளை ரெம்போ தோற்றுவித்திருக்கிறான்.

இந்நூலின் இறுதியில் உள்ள' ‘காலை’ (Morning), பிரிவு (Farewell), ஆகிய பாடல்களில் உள்ளத்திற்கு இதமான ஓர் இனிய விடியலை அவன் வரவேற்றுப் பாடுகிறான். “இவ்வளவு நாட்கள் என்னிடம் ‘நான்’ என்பது வேறு ஓர் பொருளாக இருந்தது. அந்த எண்ணத்தைக் களைந்து விட்டு, ‘நான்’ என்ற என் ஆன்மாவையும் என் உடலில் அதன் இருப்பையும் உணர்ந்து கொண்டேன். இதுவே நான் கண்டறிந்த அழகுக் கனவு; இதுவே என் வெற்றி” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பாடுகிறான்.

மற்றொரு தொகுப்பான ‘வெளிச்சங்களை’ வெர்லேன் வண்ணத்தகடுகள் (Coloured Plates) என்று குறிப்பிடுகிறார் ரெம்போவின் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும், வக்கிரங்களுக்கும் தப்பி 'வெளிச்சங்கள் இலக்கியவாதிகளின் கைகளில் இன்றும் ஒளிகுன்றாமல் இருப்பதற்கு அவற்றின் தெளிவும், பொருளமைதியும், புரியும்படியான மறைபொருள் உத்தியும் காரணங்களாகும். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் தலைப்புகள் ஒரே சொல்லாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை பன்மைச் சொற்கள் இத்தலைப்புகள் மிகவும் கவர்ச்சியானவை, கவிதையின் ஒவ்வொரு வரியும் படிமங்களின் கருவூலம்; அவை குறிப்பிடும் இடங்களும் மயங்கவைக்கும் பொய்த் தோற்றங்கள்.

Verbal alchemy: I flattered myself that I have invented a poetic language accessible, some day or other to at; the senses I adopted the most absurd and exaggerated more of expression conceivable...That is all past. I now know how to salute beauty-Rimbaud.