பக்கம்:புகழ் மாலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8

புகழ் மாலை

பந்த பாசச் சூழலிலே

பாரிற் பிறந்தோம் எனவெண்ணி நைந்து சாம்பி அழல் வேண்டா;

நல்லோர் பாலே அணுகியவர் சிந்தை ஒன்ற வகைசொல்லும் சீர்த்தி யறிந்து சாதனையை முந்திச் செய்வீர் என்கின்ருன்

முனிவன் ராம சுரத்குமார். 33 3

நாளைச் செய்வோம் என்று நீர்

நாளைப் போக்கல் நலமன்ரும்: வேளை எதுவும் நல்வேளை

விமலன் றன்னை நினைப்பதற்கே: நீளும் பாசம் கொண்டுவரும் நீசக் காலன் வருகின்ற வேளை யாவர் அறிவார்கள்?

விரைகென் பான்ராம் சுரத்குமார். - 334

கல்லே யெனினும் எறும்பூரத்

தேயும் காண்மின்; அதுபோல

அல்லே பெரிதும் உறுகின்ற

அவல மனத்தில் மெல்லமெல்ல

வல்லான் இறைவன் திருப்பதத்தை

வைத்தே தியானிக் கும்வழியில்

செல்வீர்; ஒருநாள் நலம்வருமால்:

தேர்கென் பான்ராம் சுரத்குமார். 335

ஆசை வைத்த பொருள்நிரம்பின்

அதளுே டாசை போவதிலை; பாசம் இறுகி நமையடர்த்துப்

பலவாம் பிறப்பில் உழலவைக்கும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/103&oldid=597209" இலிருந்து மீள்விக்கப்பட்டது