பக்கம்:புகழ் மாலை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

தேசன் சிவன்றன் திருவடியைத்

திரும்பத் திரும்பத் தியானித்தால்

நாசம் இல்லை எனச்சொல்லி -

நகைப்பான் ராம சுரத்குமார்,

வாடி உள்ளம் மிகக்குலைந்து

வாழும் வகையொன் றறியாமல்

தேடி யுழன்று புவியெல்லாம்

திரிந்தும் பெறும்பே ருென்றுண்டோ?

நாடி இறைவன் திருத்தாளே -

நாளும் போற்றிப் பத்தியினல்

ஆடிப் பாடல் நலம் என்பான்

அவனே ராம சுரத்குமார்.

வஞ்சம் இல்லா மனங்கொண்டார்

மாட்டே அணுகி இணங்கிய டி. தஞ்சம் என்றே புகுந்துயர்ந்த

சாத இனகள் செய்வதனல் துஞ்சும் பொழுதும் மனங்கலங்காத்

துணிவைப் பெறலாம்; சிறிதேனும் அஞ்சல் இல்லை என இயம்பும்

அவனே ராம சுரத்குமார்.

துாற்றி லுைம் புகழ்ந்திடினும்

சோர்வோ களிப்போ இல்லாமல்

ஊற்றம் மிக்க நிலையினிலே

உறுவான் குழந்தை என இருப்பான்:

தோற்றம் குடுகு டுப்பாண்டி

போலத் தோன்றும் உடையுடையான்;

ஆற்றல் மிக்கா ளுகின்ற

அவனே ராம சுரத்கு மார். பு.மா.-4

97

3.36

337

Ꮽ 3 8

339

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/104&oldid=597210" இலிருந்து மீள்விக்கப்பட்டது