பக்கம்:புகழ் மாலை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

தக்க வர் பால் அணுகிஅவர் -

சாற்றும் உரையைக் கேட்டொழுகென்

றக்க மணிபூண் டுரைக்கின் முன் அவனே ராம சுரத்குமார்.

தாடி வளர்ப்பான்; முடிவளர்ப்பான்; தன்னை அண்டி ஞேர்க்கின்சொல் நாடி உரைப்பான்; குழந்தைபோல்

நகுவான்; பரம சாந்த னெனக் கூடி உணர்வார் தமக்கன்றிக்

குணிக்க லாகா இயல்புடையான், ஆடிப் பாடிக் குதுகலிக்கும்

அவனே ராம சுரத்குமார்.

வேண்டும் பொருளொன் றில்லா தான்;

மேவும் அவர்கள் தருவஎ லாம் ஈண்டு பவர்க்கே வழங்கிடுவான்;

என்றும் குழந்தை போற்சிரிப்பான்: தாண்ட வம் செய் தேராம

நாமந் தன்னைச் சாற்றிடுவான்; ஆண்ட வன்பேர் சொல்கஎனும் அவனே ராம சுரத்குமார்.

ஓங்கா ரத்தின் உட்பொருளை - -- உபநி டஞ்சொல் தனிப்பொருள்ப் பாங்கார் தரவே ம்னத்திருத்திப்

பத்தி செய்யின் நலம் உண்டாம்; தீங்கார் பிறவி யறுப்பதற்கே

தேர்ந்த வழியீ தெனச்சொல்லி ஆங்கா ரத்தை நீக்கியவன்

அவனே ராம சுரத்குமார்,

§ 9

343

344

345

346

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/106&oldid=597212" இலிருந்து மீள்விக்கப்பட்டது