பக்கம்:புகழ் மாலை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

கனைக்கும் மாயையின் வலிமை போக்கிய

கண்ணி யன்மிகத் திண்ணியன்:

அனேக்கு நேர்தரும் ராம் சுரத்குமார்

அருணை மாநகர் வாழ்வனே.

(கட்டளைக் கலிப்பா)

காசை யேபெரி தாக நினைந்திடும்

காசி னிக்குள் இறையருள் மேன்மையை மாசி லாத வகையில் உணர்த்திடும்

வள்ளல் நற்றவ யோகம் நிரம்பினன்; தேசு பெற்றவன் அண்ணு மலைப்பதி

திகழு கின்றவன்; எக்கண மேனும்தன் வாசி போலவே ராமன்றன் நாமத்தை

மனத்தி லெண்ணுவான் ராம சுரத்குமார்.

மாயைப் பேயின் வலியை அடக்கினன்;

மலங்கள் போக மிகவும் முடக்கினன்; - சேயைப் போலச் சிரித்து மகிழ்பவன்;

சிறிய எண்ணங்கள் சற்றும் இலாதவன்; தாயைப் போலத் தயையிற் சிறந்தவன்

தந்தை போல அறிவுரை சொல்பவன்; நாயை அன்புடன் கொஞ்சிக் களிப்பவன் நாமம் ராம சுரத்குமார் காண்மினே. 3.

கண்டு போல இனிய மொழிபவன்;

கண்டு தந்துபால் தந்து களிப்பவன்; அண்டு வார்கள் மனத்துயர் போகவிே

அமுத மாகிய சொற்கள் விரிப்பவன்; மிண்டு செய்யும் பொறியை அடக்கினன்;

வேதம் என்பது மேம்படு நூலென்டான்: எண்டி சைக்கும் பராவும் புகழினன்;

இருந்த வத்தினன் ராம சுரத்குமார்.

1 1 ||

3 & 4

38 of

386.

3.87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/118&oldid=597224" இலிருந்து மீள்விக்கப்பட்டது