பக்கம்:புகழ் மாலை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

செங்க ரத்தினுல் பாலே அளிப்பவன்;

சினமென் கின்றதைச் சீறி அடக்கினன்;

எங்கு மாய் நிற்கும் அப்பர மாத்மனை --

இதயம் வைத்தவன், ராம சுரத்குமார்.

பாலர் வந்து பணிகுவர்; மங்கையர்

பரிவி ைேடு வணங்குவர்; பண்புடைச் சீலர் வந்து தொழுகுவர்; பாவலர்

சேர்ந்து பற்பல பாவினைப் பாடுவார்; கோலம் பற்பல காட்டியே நிற்கிருன்;

குதுரகவித்து மகிழ்ந்து சிரிக்கிருன்: ஆலம் தன்னை அமுதென ஆக்கியோன், அருணே மாநகர் ராம சுரத்குமார்.

வேத னைப்படு நெஞ்சினர் வந்தி டின்

வேது தன்னைக் கொடுப்பவன் போலவே சீத நன்மொழி பேசி நலம்செய்து -

செம்மை யாகிய நன்னெறி காட்டுவான்; போத மெய்ப்பொருள் இன்னதென் றேயறி

பொற்பி னன்; தீக் குணங்கள் அகற்றினன்; வேத நான்கினும் சொல்லிய மெய்ப்பொருள்

மேவு முள்ளத் தன் ராம சுரத்குமார்.

காண வந்து வணங்கி எழுபவர்

கருத்தை உன்னியே நன்மையைக் ಹTL@TT; -

பூண லுற்றதோர் பாகை உடையவன்;

பொற்பு மேவிய அக்கநன் மாலேயன்,

பேண லுற்றவர்க் கன்னையைப் போல்பவன்

பிஞ்ளு கன்றிருப் பாதத்தை உள்ளத்தே

மாண வைத்தவன் அண்ணு மலைப்பதி

வாழும் யோகியாம் ராம சுரத்குமார்.

II 3

39 I

392

393

394

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/120&oldid=597226" இலிருந்து மீள்விக்கப்பட்டது