பக்கம்:புகழ் மாலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 புகழ் மாலை

கட்டோடே கனத்தோடே கருதியிங்கே வாழ்ந்திடுவீர், பட்டோடே பணத்தோடே பலர்மெச்ச இருந்திடுவீர்,

எட்டோடே இரண்டென்ன இருப்பதற்கே வகையறியீர், கட்டாரா ராமசுரத் குமார் தன்னைக் கண்டிடுமின். 33

செஞ்சொல்லால் பேசுகின்ற திருப்புகழைக் கேட்டுவக்கும் அஞ்சொல்லான்; குழந்தைபோல் அருஞ்சிரிப்புச் சிரித்திடுவான், வெஞ்சினமே ஏயாத விரகுள்ளான், அருணேயினில்

வஞ்சமிலான் ராமசுரத் குமார் மாட்டே வம்மினே. 34

இடையன்பால் பால்பெறலாம் வேறென்ன எய்தலாம்? மிடைபொறியின் விர கெல்லாம் மேவாமல் நின்றிடலாம் அடைதரும்நன் ஞானமெல்லாம் அறிந்துணர வாய்ப்பாகும் நடைதெரிந்த ராமசுரத் குமார்பாலே நண்ணு மினே. 35

எத்தாலும் வாழ்வதற்கே இணங்குகின்றீர், காலன்வந்து செத்தாலே என்செய்வீர்? சிவன்தன்னை நினைப்பதற்கே ஒத்தாரும் மனமுங்கள் உறவாக வேண்டுமென்னில்

சத்தான வன்ராம சுரத்குமார் தனைச்சார்வீர். @伊

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) உலகமெலாம் சுற்றிடினும் தலங்களெலாம்

சென்றிடினும் ஒன்றை யெண்ணிக் கலகமிலா வழிதெரிந்து மனமடக்கி நிற்கின்ற கதிதான் வேண்டும்: அலகிலவாம் சமயமெலாம் ஒருவனையே

சொல்கின்ற அமைதி தேர்வீர்; பலகலையும் கற்றுணர்ந்தார் போற்றுகின்ற

ராமசுரத் குமார்பால் வம்மின், . . . . . . き 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/17&oldid=597105" இலிருந்து மீள்விக்கப்பட்டது