பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 99

அப்படிப்பட்ட சாதாரணத் தெருவின் சர்வ சாதாரண மான வீடு ஒன்றின் சன்னலுக்குப் பின்னால் ஒரு சமயம் ஒரு அதிசயம் தலை காட்டியது.

‘அசாதாரண அழகு படைத்த பெண் என்று ராம மூர்த்தியின் உள்ளம் பேசியது. அவள் கண்கள் அற்புத ரசத்தை உள்ளடக்கிய கவிதைகளே யாகும் என்றது அவனுடைய ரசிகமணம்.

அன்று முதல் அந்த சன்னல் மாத்திரம் பிற சாளரங் களைவிட முக்கியத்துவம் பெற்ற தாய், அதிவிசேஷ மானதாய், அழகை உள்ளடக்கிய ஒரு வலை போலவும் அவன் பார்வையைக் கவர்ந்து இழுக்கும் காந்தம் போலவும் விளங்கியது. - -

ஒருநாள் அவ் வீட்டின் வாசல் படியில் அழகு முழு உருவம் கொண்டு நின்றது. அதன் நிலையிலே ஒய்யாரம் மிளிர்ந்தது. அதனுடைய சிறு அசைவில் கூட ஒயில் மின்னியது.

‘எழில் நிறை ஒவியம் இவள் தோற்றம், பொருள் புதை காவியம் இவள் பார்வை’ என்று வியந்தது ராமமூர்த்தியின் உள்ளம். அவன் நல்ல ரசிகன்.

தினம் அவசியத்தோடு மூன்று நான்கு தடவைகள் அவ்வீதி வழியே போய் வந்து கொண்டிருந்த ராமமூர்த்தி, அவசியம் இல்லாமலே ஆறேழு முறைகள் அப்படியும் இப்படியும் அலையலானான். அவன் நடை வினாய் போவதில்லை. -

அந்த அழகுப் பெண் சாளரத்துச் சந்திரி கையாகக் காட்சி தராத சமயங்களில் எல்லாம் படி ஒரத்துப் பதுமையாக நின்றாள். பார்வைக்கும் விருந்தானாள். பார்த்து, மகிழ்ந்து, இளம் சிரிப்புச் சித்திரித்து இனிமையாக விளங்கினாள்.