பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)Q புண்ணியம் ஆம் பாவம்போம்!

அபூர்வமாக எப்பொழுதுாவது அவனுக்கு எதிரே நடந்து வருவதும் உண்டு. எங்காவது கடை, சிநேகிதி வீடு, தபாலா பீஸ் என்று போய் விட்டுத் திரும்பி வந்து கொண்டிருப்பாள்.

ஆகா, இவள் நடை மிக அழகு! நீள் சடை அசைவுற, நடைபயில் மயிலென மயிலென இவள்வருவது அற்புதமான காட்சி என வியக்கும் அவன் உள்ளம்.

ராமமூர்த்தியின் ரசிகமனம், என்றோ படித்துக் களித்த பாடல்களை இடம் - பொருள் ஏவல்களுக்கு ஏற்றபடியும் தனது இஷ்டம் போலவும் திரித்தும் பிரித்தும், கூட்டியும் குறைத்தும் புலம்பும் பண்பு உடையதுதான்.

சந்தர்ப்பங்கள் எப்படி எப்படியோ உதவின. அந்த அழகி வெறும் பார்வைப் பொருளாக இருந்த நிலை மாறி, சிரிப்புப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் நிலைமையை அடைந்தாள். ஒன்றிரண்டு வார்த்தைகள் வாய் உபசாரமாகப் பேசத் தொடங்கி, விரைவிலேயே அவனும் அவளும் சகஜமாகப் பேசவும் அருகருகே நடக்கவும் கூடிய அளவுக்கு பழக்கம் முற்றியது.

அப்போதெல்லாம் அந்தத் தெரு தனது சாதாரணத் தன்மையிலிருந்து உயர்ந்து ஓங்கி விட்டது. அவன் கருத்திலே

தான. -

அழுகுணித் தோற்றம் உடைய இலைகளின் நடுவில் திடீரென அழகிய மொக்கு முகிழ்த்து, ஈடு இணை இல்லாத மோகன மலராகப் பூத்து தனித் தன்மையோடு திகழ்வது மாதிரி அந்தத் தெருவும் சோபை பெற்றது. அவன் பார்வை யில் தான்.

இதர வீதிகளில் நின்ற எலெக்ட்ரிக் கம்பங்களை விட அத் தெருவில் காணப்பட்ட கம்பங்கள் கலைநயம் உடையனவாகவும், அவற்றில் இரவு வேளையில் எரியும்