பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 0

விளக்குகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிகப் பிரகாசம் பெற்று விளங்குவதாகவும் அவனுக்குத் தோன்றின. மற்றவை வெறும் விளக்குகள். இவை ஒளி சிரிக்கும் குமிழ் வடிவப் பூக்கள் போல் அல்லவா இருக்கின்றன என்று எண்ணும் அவன் மனம்.

அந்தத் தெருவில் நின்ற ஒன்றிரண்டு மரங்கள்கூட, கைதேர்ந்த ஓவியன் கலைத் திறமையோடு தீட்டும் காட்சியில் சேர்த்து விடுகிற தனிரக மரங்கள் மாதிரித்தான் அவன் பார்வையில் பட்டன.

அவள் பெயர் சாந்தா என அறிந்து கொண்டான் அவன். r.

சாந்தாவைக் கண்டது முதல்ராமமூர்த்தியின் உள்ளம் சாந்தியை இழந்து தவித்தது. அவளோடு பேசும்போது, அவள் சிரிப்பதைப் பார்க்கும்போது, தானும் உடன் சிரித்து மகிழ்கிறபோது அவளோடு சேர்ந்து நடக்கிற போது - இப்படிப் பல சந்தர்ப்பங்களிலும் அவன் உள்ளத்தில் அலைமோதிய உணர்வுச் சுழிப்புகள் பல ரகமாகும். +

‘இந்தத் தெரு இனியது. ரொம்ப அழகானது. இதில் நடந்து போகிற போது உண்டாகிற சுகமும் இதமும், இனிமையும் மகிழ்வும் தனி ரகமானவை என்று அவன் நினைத்தான். சாந்தா அருகே, அவளோடு பேசிக் கொண்டு, அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாததற் கெல்லாம் சிரித்துச் சிரித்து மகிழ்ந்து மெதுவாக நடக்கிறபோது, வெயில் கூட நிலவின் குளுமையைப் பெற்று விட்டதாகத்தான் தோன்றும் அவனுக்கு.

திடிரென்று நிலைமையிலே மாறுதல் ஏற்பட்டது. சாந்தா போய் விட்டாள். அவளுக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. - . --