பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - *97

தொங்கிய கூந்தல் நெளிவுகளையும் ரசித்து மகிழ்ந்தவாறு மெதுவாக நடந்தான் சிவகாமிநாதன். இவள் முகம் எப்படி இருக்குமோ என்று அவன் நினைத்தான்.

தனது எண்ணத்துக்கு ‘எலெக்ட்ரிக் தனம் உண்டு என்பது அவனது நம்பிக்கைகளில் ஒன்று. இப்போதும் அந்த நம்பிக்கைக்கு வலு அளிப்பது போல், அவன் நினைத்த உடனேயே, அவள் முதுகில் யாரோ தொட்டுத் தட்டியதால் திடுக்கிட்டவள்போல, அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள். கவர்ச்சிக்கும் பொல்லாத கண்கள் அவளுக்கிருந்தன. ‘இவள் முகமும் ஜோராகத்தானிருக்கிறது என்ற திருப்தி சிவகாமிக்கு ஏற்பட்டது.

அவள் மறுபடியும் திரும்பி நோக்கினாள். முகம் மலர்ச்சியுற அந்த இடத்திலேயே நின்று விட்டாள்.

அவனுக்கு வியப்பும் திகைப்பும் உண்டாயின. அவன் அவள் அருகே வந்ததும், அவள் சிரித்துக்கொண்டே, என்ன சிவகாமிநாதன், எப்ப வந்தே செளக்கியமெல்லாம் எப்படி? வீட்டிலே எல்லாரும் செளக்கியமா? என்று விசாரித்தாள்.

‘இவள் யார்? எனக்கு ஞாபகத்துக்கு வரமாட் டேன்குதே! என்று அவன் உள்ளத்தினுள் தவித்தபோதிலும் உரிய விடைகளைச் சொன்னான். நீ யாரு?” என்று கேட்கவும் மனம் வரவில்லை. இவ்வளவு பரிவுடன் நலம் விசாரிப்பவள் நம் வீட்டுக்கு வந்து போனவளாகத் தான் இருக்க வேண்டும்; சொந்தக்காரப் பெண்ணாககூட இருக்கலாம்; துரத்து உறவாக இருக்குமென்று அவன் மனம் சமாதானம் கூறிக் கொண்டிருந்தது. -

‘இவ்வளவு தூரம் வந்தவன் எங்க வீட்டுக்கு வரக் கூடாதாக்கும்? உம், பவானி இருக்கிற படி இருந்தால், ரயிலைவிட்டு இறங்கிய உடனேயே நீபவானி மச்சி வீடு தேடி