பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாதயம்

ஞானோதயம் - அதாவது அறிவின் விழிப்பு - யாருக்கு, எந்தச் சமயத்தில், எப்படி ஏற்படும் என்று சொல்வ தற்கில்லை.

சித்தார்த்தனுக்கு அது என்றோ ஒரு நாள் போதி மரத்தடியில் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

பக்தன் அன்ந்தசாமிக்கு படுக்கையறைக் கட்டிலின் பக்கத்திலே திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. அது ஒரு ரசமான கதைதான்.

அனந்தசாமி, சித்தார்த்தன் மாதிரி மூப்பு, பிணி, மரணம் முதலிய வாழ்க்கைக் கொடுமைகளிலிருந்து மாற்று காண்பது பற்றி சதாசிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. பிறவிப் பெருங் கடல் நீந்துவது பற்றியோ மனித குலம் உய்யவேண்டும் என்றோ அவன் கவலைவளர்த்து வாழவுமில்லை.

அவன் சாதாரணப் பேர்வழிதான். மாதம் தோறும் குறிப்பிட்ட வருவாய்க்கு வழிசெய்யும் உத்தியோகம் ஒன்று அவனுக்கு இருந்தது. மாதச் சம்பளம் என்பதைப் பெரிய பாக்கியமாகக் கருதி வாழ்க்கை நடத்துவதில் அளவிலாத