பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் • 7

அடிகளின் தனிக் கவனிப்புக்கு உரிய விசேஷ அன்பர்களில் ஒருவன் ஆகிவிட்டான்.

அன்பானந்த அடிகள், சிவப் பழம், பக்திச் சுடர். ‘கலிகாலக் கடவுள்’ என்றுகூட அவருடைய பக்தர்கள் சொன்னார்கள். அவருக்குப் பணிவிடை செய்வதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்’ என்றும் கூறுவர். அப்படி ‘கொடுத்து வைத்தவர்கள் பட்டியலில் அனந்தசாமியும் ஒருவன் ஆகிவிட்டான்.

அன்பானந்தர் அவன் உள்ளத்தில் கோயில் கொண்டு விட்டார். அவர் புனிதத்தின் திருஉருவம், அறத்தின் அவதாரம், உத்தம குனங்களின் உறைவிடம் என்றெல்லாம் அனந்த சாமி நம்பினான். அந்த நம்பிக்கையை இதர அன்பர்களும் வளர்த்து வந்தார்கள். ஆகவே அடிகளைப்பற்றி யாராவது குறைவாகப் பேசினால் அனந்தசாமி தன் கைகளால் காதுகளை மூடிக்கொண்டு, முருகா முருகா! என முனு. முணுப் பான். சே என்ன ஜனங்கள்! இவரைப்பற்றி இப்படி மோசமாக எண்ண இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருதோ என்று தவிப்பான். -

அடிகளைப் புகழ்ந்துபோற்றும் நபர்களைப்பற்றி அறிய நேர்ந்ததால், அவர்களல்லவா உண்மையை, உயர்வை, சிறப்பை உணரும் ஆற்றல் உடையவர்கள்!’ என அக மகிழ்வான் அனந்தசாமி. தெரிய முடிந்தவர்களால்தான் தெரிந்து கொள்ளக்கூடும் என்று ஏதோ சுலோகம்மாதிரி சொல்லுவான். -

ஆனால் பரிகாசம் பேசும் சுபாவம் உடையவர்களோ அட்டகாசமாய் சிரிப்பார்கள். ஆமா தெரிஞ்சவாளுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டு முட்டை என்று புரளி பண்ணு வார்கள். அப்பாவி அனந்தசாமிக்கு கோபம் வரும். ஏலாக் கோபம்தான். அவன் மற்றவர்களை என்ன செய்துவிட