பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2

கார் அங்கேயே ஒரு ஒரத்தில் நின்றது. அந்த அம்மையாரும் போவதாய் தெரியவில்லை. அடிகளுக்குப் பணிவிடை செய்வதில் மனச்சாந்தி தேடமுயலும் மற்று மொரு பக்தமணி என்று அனந்தசாமி எண்ணிக் கொண்டான்.

விசாலமான அறை. அதன் ஒரத்தில் அகலமான கட்டில் கிடந்தது. அதில் படுக்கை பரப்பி, தலையணை தட்டி, சரிப்படுத்தி வைத்தாள் அம்மாள்.

அனந்தசாமி முற்றத்தில் ஒரு இடத்தில் படுத்துக் கொண்டான். அவனுக்கு அலுப்பு. சீக்கிரமே தூங்கிப் போனான்.

இரவு எனும் மர்ம வித்தைக் காரன் இருள் படுதாவினால் உலகை மூடி வைத்திருந்தான். அவன் பாச்சா பலிக்க விடாது நிலா வெளிச்சத்தை கொட்டிப் பூசியது.

அந்த வீட்டிலும் நிலவொளியால் இருள் வெளிறித் தெரிந்தது. -

அனந்தசாமி திடுக்கிட்டு விழித்தான். மணி என்ன இருக்கும் என்ற சந்தேகம் அவனைப் பிடித்து ஆட்டியது. அதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தூக்கம் வராது என்று தோன்றியது. -

அவன் எழுந்து, கடிகாரம் இருந்த இடத்தை நோக்கிப் போனான். அவன் பார்வையில் கட்டில் நன்கு புலனாயிற்று. அதன்மீது அவன் கண்டகாட்சி அவனை அதிர வைத்தது.

அன்பானந்த அடிகள் சுகநித்திரையில் இருந்தார். அவரை ஒட்டி, அவர்தோளில் கை போட்டு அணைத்தவாறு, சூரிய காந்தா தன்னை மறந்த இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தாள். அவர்களுடைய ஆடைகள் அலங்கோலமாகக் கிடந்தன. -