பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புண்ணியம் ஆம் பாவம்போம்!

பனியோ கானல் அசைவுகளோ போன்ற ஒன்று வந்து என் முகத்தில் தாக்கும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது.

நான் சூழ்நிலை மறந்து சிரிக்கிறேன். அருகில் இருப்பவர்கள் என்ன என்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டுகிறேன். அவர்கள் ஒரு தினுசாகப் பார்க்கிறார்கள்.

என்னிடம் எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆதி நாளில் என் அம்மாவே சொல்லியிருக்கிறாள். விளை யாட்டு, வேடிக்கை, திருவிழாக் கூட்டம் என்றெல்லாம் உற்சாகமாகப் பொழுது போக்காது, சதா புத்தகங்களிலேயே மூழ்கிக் கிடப்பதைக் காணும் போதெல்லாம் சொல்வாள்: “ஒ யாமல் என்ன படிப்பு? இப்படிப் படிச்சால் மூளை கொதிச் சுப் போம். சும்மா எப்ப பார்த்தாலும் படிச்சுக் கிட்டே இரு க்கப்படாது!’

சீட்டாட்டம். சினிமா, ஜாலிப் பேச்சு. உல்லாச உலா என்று அவர்களோடு சேர்ந்து, அவர்களைப் போல் நாளோட்டு வதில் விருப்பம் கொண்டிராத என்னைப் பார்த்து என் நண்பர் களும் அன்பர்களும் அயலவர்களும் அடிக்கடி சொல்லியி ருக்கிறார்கள். ஏ, இப்படி ஒரே அடியாப் படிச்சுக் கிட்டிருந்தா மூளைக் கொதிப்பு ஏற்பட்டுவிடும். பைத்தியம் புடிச்சிரும் டேய் என்று. o

இருக்குமோ? பிடிச்சிருக்குமோ? பிடித்துக் கொண்டிருக்கின்றதோ? எனக்குப் புரிய வில்லை.

என் நினைப்புகள், கனவுகள், விழிநிலைக் கனவுகள், கனவுநிலைச் சுழிப்புகள், தூங்கியும் தூங்காமலும் - துயில் நிலையும் விழிப்பு நிலையும் கலந்து பின்னித் தெளிவும் தெளிவில்லாத் தன்மையுமாய் தொய்ந்து கிடக்கிறபோது மூளைக்குள் குட்டிக்குறளிகள் நடத்துகிற கூத்தும்; காதருகில்