பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புண்ணியம் ஆம் பாவம்போம்!

நாடகங்கள். இவை எல்லாம என் மூளையின் கொடுர விளை யாடல்கள்தான். ஏன் இப்படி அது விளையாட வேண்டும்? எனக்குப் புரியவில்லை.

நேற்று என்ன நடந்தது தெரியுமா? தூக்கத்தில்தான். மே ற்குத் கடற்கரை ஓரத்தில் ஒரு இடம். பூமி மிக உயர்ந்து, மேடு களும் பள்ளங்களுமான மலைப்பகுதியாக விளங்கும் ஒரு எல்லையில், செங்குத்தாய் செம்மையாய் முடிந்து நிற்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள். பசுமைக் காட்சிகள் கீழே. வெகு வெகு கீழ் மட்டத்தில், தென்னை மரங்கள் - கடல் மணல், வெள்ளை வெளேரென்று. அதற்கும் அப்பால் நீலக்கடல். அற்புதமான அமைதிமயமான அழகுக் காட்சி மேலே நீல வானம். வெள்ளொளி வீசிப் பிரகாசிக்கிறது சூரியன். அதன் ஒளி எங்கும் அற்புதக் கவர்ச்சி ஏற்றித் திகழ்கிறது. மேலே நானும் இன்னும் சிலரும். பூமி ஒரத்தில் நின்று கிடுகிடு பள்ளத்தை எட்டிப் பார்த்தால் தலை சுற்றுவது போல், கீழே உள்ள தென்னைகள் மிகச் சிறியனவாயும். மணலில் நடக்கும் ஒன்றிரு மனிதர்கள் விசித்திரக் குள்ள உருவங்களாகவும் தோன்றுகிற அளவுக்கு மிக உயரமான இடத்தில் நாங்கள் நின்றோம். ரசித்து வியக்கப்பட வேண்டிய அபூர்வமான இடங்களில் இதுவும் ஒன்று. வியந்து கொண்டிருந்த என்னை, அருகில் நின்ற இருவர் சட்டென்று பிடித்துத் தள்ளிவிடுகிறார்கள். நான் பயந்து குழம்பி அலறி ஒலமிட்டுக் கொண்டே விழுகிறேன்... விழுகிறேன்.

என் உடல் நடுக்கமுற, வேர்வை பெருக, நான் ஊமைக் குரலில் உளறிக் கத்தியவாறு விழிக்கிறேன். திருதிருவென்று விழித்து, சுற்று முற்றும் பார்க்கிறேன். வழக்கமாக நான் படுத் துறங்கும் இடம்தான். உயரே தொங்கும் விளக்கு எரிகிறது. என் அலறலால் தூக்கம் கெட்டவர்கள் என்னைச் சுற்றிலும் நி ற்கிறார்கள். என்ன? ஏன்? எதுக்காக இப் படிச் சத்தம் போட்டே? எவ்வளவு பயமாக இருந்தது? அநேக குரல்கள்.